Saturday 28 March 2020

'இயேசு ' என்பதே தமிழ் சொல் தான் !

கிரேக்கத்திற்கும் தமிழுக்கும் இருக்கும் நெருங்கிய உறவைப் பற்றிய பல சுவையான தகவல்களை இது வரை இந்த வலைப்  பக்கத்தில் தந்திருக்கிறேன் .அதன் உச்சமாக இன்று ஒரு சொல் பற்றி சொல்லப் போகிறேன் .அதைக் கேட்டால் ,நிச்சயம் அசந்து விடுவீர்கள் !
                                 அந்த சொல்  இந்த உலகத்தில் மிகவும் பிரசித்தமான பெயர் !உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவிய ஒரு பெயர் !அது 'இயேசு ' என்னும் உயரிய பெயர்.ஆங்கிலத்தில்  'Jesus!The name above all names! என்பார்கள் . 'எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் 'இயேசு 'என்னும் நாமம் 'என்று இதன் பொருள் .இந்த 'இயேசு 'என்னும் பெயர் தமிழ் தான் என்பதே இன்றைய சுவையான தகவல் !
புத்தகம் தரும் புது ஆதாரம் !
சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியான 'Proto-Indo-European Language-Face  Unveiled !' என்ற நூலில் கீழ்கண்ட தகவல் உள்ளது .
QUOTE :
8.COMMON WORD -‘Jesus ’ in English(En) & ‘Eesan’ in X Language(XL)
Etymology of Jesus’(En):
Online Etymology Dictionary
The word 'Jesus' according to Online Etymology Dictionary means "personal name of the Christian Savior, late 12c.; it is the Greek form of Joshua, used variously in translations of the Bible. From Late Latin Iesus (properly pronounced as three syllables), from Greek Iesous, which is an attempt to render into Greek the Aramaic proper name Jeshua (Hebrew Yeshua, Yoshua) "Jah is salvation." This was a common Jewish personal name during the Hellenizing period; it is the later form of Hebrew Yehoshua (see Joshua).
Old English used hælend "savior." The common Middle English form was Jesu/Iesu, from the Old French objective case form, from Latin oblique form Iesu (genitive, dative, ablative, vocative), surviving in some invocations. As an oath, attested from late 14c. For Jesus H. Christ (1924), see I.H.S. First record of Jesus freak is from 1970."
The web site ‘Meaning, origin and history of the name Jesus’ provides the 'related names in other languages' as under:
Yeshua (Ancient Aramaic), Essa, Isa, Issa, Yushua (Arabic), Josu (Basque), Iesous (Biblical Greek), Yehoshua, Yeshua (Biblical Hebrew), Iesus, Iosue (Biblical Latin), Jozua (Dutch), Joshua (English),Josué (French), Xesús (Galician), Iokua (Hawaiian), Yehoshua (Hebrew), Józsua (Hungarian), Giosuè (Italian), Josué (Portuguese),Jesús, Josué, Chucho, Chus, Chuy (Spanish), İsa (Turkish)”
Comments:
The etymology is rooted in Greek/Latin word’Iesus’ without a clear and acceptable meaning.
Etymology of Eesan’(XL):
In XL ,the word 'Jesus' becomes 'Yesu' as it becomes in Greek also.'Esan' ஈசன்  is 'God' in XL.
Miron Winslow -  Dictionary provides the following meaning for 'Eesan'
"s. The Divine Being, கட வுள். 2. Siva, சிவன். 3. A king, an emperor, a superior, a ruler, a master, அரசன். Wils. p. 135. EESA. 4. A senior, an elder, an aged person, மூத்தோன். 5. A priest, குரு. 6. Vishnu, விட்டுணு. 7. Brah ma, பிரமன். 8. The lord of the universe,எப்பொருட்குமிறைவன். (p.) 9. The கௌரி பாஷாணம்."
XL word'Yesathavar'
More over 'Yesathavar' in XL means ' blemish less' vide:
J.P.Fabricius XL and English Dictionary
"III. v. t. abuse, reproach, insult, இகழு; 2. hurl, dart, செலுத்து.
ஏசாதவர், (ஏசு+, negative +) the irreprochable, gods; 2. the unimpeachable, the good (நல்லார்).”
Comments:
So the word 'Jesus' is clearly linked to Tamil 'Eesan/Yesathavar' which means 'God' or‘blemishless’ respectively. The ownership of the word is clearly of  XL as proved by the presence of root,meaning and related words.
UNQUOTE 
                           'இயேசு 'என்ற சொல்லிற்கு கிரேக்கத்தில் தெளிவான ,ஒத்துக்கொள்ளக்கூடிய பொருள் ஒன்றும் இல்லை .அதாக இருக்கலாம் ,இதாக இருக்கலாம் என்று அவர்கள் சொல்லும் வேர் ஒன்றும் ஒத்துக்கொள்ளக்கூடியதாக இல்லை .மேலும் ,அவர்கள் கோரலுக்கு ஆதாரமும் இல்லை .
                     ஆனால் ,தமிழில் தெளிவான ,மறுக்க முடியாத ஆதாரம் உள்ளது .'ஜீசஸ் 'என்ற ஆங்கில சொல் ''இயேசு 'என்று கிரேக்கத்தில் மாறி ,'ஈசன் 'என்று தமிழில் மாறும் .'ஈசன் 'என்றால் தமிழில் 'கடவுள்'என்பது எல்லோரும் அறிந்ததே .
                    மேலும் ,தமிழில் 'ஏசுதல் 'என்றால் 'திட்டுதல் 'என்று 'பொருள்.தென் மாவட்டங்களில் ,இது பரவலாக பயன் படும் சொல் ."சும்மா ,அவனை ஏசாதே !"என்பார்கள் .இதிலிருந்து 'ஏசாதவர்'என்ற சொல் பிறந்து ,'நல்லார் 'என்ற பொருளில் ஆகிறது(மேலே காண்க ) .கிறிஸ்தவத்தில் ''இயேசு பாவமற்ற நல்லார் '  என்பார் .
ஆக ,'இயேசு 'என்ற பெயர் தமிழ் தான் என்பதை யாராலும்  மறுக்க முடியாது .

No comments:

Post a Comment